ஹாட்ரிக் கூட்டணி!

ஹாட்ரிக் கூட்டணி!

செய்திகள் 4-Jan-2014 1:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்து, ‘நண்பேன்டா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜேஷ் இயக்கிய ‘பாஸ் என்னிகிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானம் அடிக்கடிப் பேசும் வசனம் ’நண்பேன்டா’. இந்தப் பெயரில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஏ.ஜெகதீஷ் இயக்குகிறார்.

உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்ந்து நடித்து வரும் சந்தானம் இந்தப் படத்திலும் நடிக்க, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு இசை அமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜே இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின், ‘ரெட்ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிப்ரவரி இரண்டாவது வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;