ஜான் ஆப்ரகாம் ரகசிய திருமணமா?

ஜான் ஆப்ரகாம் ரகசிய திருமணமா?

செய்திகள் 4-Jan-2014 12:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் ஸ்டார் ஜான் ஆப்ரகாம் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற செய்திதான் இப்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக்! புத்தாண்டை ஒட்டி ஜான் டுவீட் செய்திருந்த வாழ்த்துச் செய்தியில், தான் திருமணம் ஆனவர் என்று பொருள்படும் படி குறிப்பிட்டிருக்கிறார். அதில், 'Wishing you and your loved ones a blessed 2014! May this year bring you love, good fortune and joy. Love, John and Priya Abraham' என்று குறிப்பிட்டிருக்கிறார்!

ஜான் ஆப்ரகாம் திருமணம் புரிந்துகொண்டதாக கூறப்படும் பெண்மணியின் முழுப் பெயர் பிரியா ருஞ்சல். இந்த பெயரில் உள்ள ‘ருஞ்சலை’ எடுத்துவிட்டு, , பிரியாவுடன் ஆப்ரகாம்’ இணைத்து பெயர் போட்டிருப்பதால் ஜான் ஆப்ரகாம், பிரியா ருஞ்சலை திருமணம் செய்துள்ளார் என்பது உறுதியாகிறது என்கின்றனர் விஷயம் தெரிந்த சில பாலிவுட் பிரபலங்கள்! அப்படி என்றால் ஏன் இந்த திருமண விஷயத்தை மறைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு காரணமாக கூறுவது, ஒரு நிதி நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கும் பிரியாவை ஜான் ஆப்ரகாம் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.

ஏற்கெனவே பாலிவுட் பிரபலம் பிபாஷா பாசுவை காதலித்து அவரை பிரிந்தவர் ஜான்! அப்படியிருக்க இன்னும் திருமணம் செய்து கொள்ளாத பிபாஷாவுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்துதான் ஜான் ஆப்ரகாம் தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருக்கிறாராம்.

எது எப்படியோ, எந்த ரகசியமும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பது ஜானுக்கு தெரியாமலா இருக்கும்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;