விஜய்யின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

விஜய்யின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

செய்திகள் 4-Jan-2014 12:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜில்லா’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை யார் தயாரிக்கிறார் தெரியுமா? நீண்ட காலமாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் பி.டி.செல்வகுமார் தான்! இவர் ஒரு சில படங்களை தயாரித்திருப்பதோடு, சமீபத்தில் வெளியான ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் கடுமையான ஒரு உழைப்பாளியாக செயல்பட்டு வந்த பி.டி.செல்வகுமாருக்கு தக்க தருணத்தில் நல்லதொரு வாய்ப்பை வழங்கியுள்ளார் இளைய தளபதி விஜய். இந்தப் படத்தின் தயாரிப்பில், ‘தமீன் ஃபிலிம்ஸ்’ ஷிபுவும் செல்வகுமாருடன் கை கோர்க்க இருக்கிறார். இந்தப் படம் சம்பந்தமான கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிய வரும்!

நீண்ட காலமாக தன்னுடன் இருந்து பணியாற்றி வரும் பி.டி.செல்வகுமாருக்கு விஜய்யின் புத்தாண்டு சர்ப்ரைஸ் கிஃப்ட் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;