நடிகர் சூரி, போலீசில் புகார்!

நடிகர் சூரி, போலீசில் புகார்!

செய்திகள் 4-Jan-2014 11:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சூரி, போலீசில் புகார்! தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் சூரியும் குறிப்பிடத்தக்கவர். சமீபத்தில் வெளியான பல படங்களின் வெற்றிக்கு இவரது காமெடியும் முக்கிய அம்சமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இப்படி சினிமாவில்முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் சூரியின் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை ஆரம்பித்து தவறான தகவல்களை வெளியிட்டு சூரிக்கு களங்கத்தை ஏற்படுத்தி வந்தனர். சமீபத்தில், 'இவன் வேற மாதிரி' படத்திற்கு ரஜினி அளித்த பாராட்டு கடிதம் பற்றி இவரது பெயரில் இயங்கிவந்த டுவிட்டர் தளத்தில் கருத்து ஒன்று வெளியிடப்பட்டது. அக்கருத்தால், ரஜினியை அவதூறாக பேசிவிட்டார் சூரி என்று செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அம்மனுவில்,

‘‘தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் நான் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதையுடன் இருந்து வருகிறேன். நான் மற்றவர்களது விஷயங்களில் தலையிடுவதோ, கருத்து சொல்வதோ கிடையாது. ஆனால் ரஜினிகாந்த் பற்றி நான் அவதூறாக பேசியிருப்பதாக வந்த தகவல்களை கேட்டு பதறிப்போனேன்! நான் அது பற்றி விசாரித்தபோது எனது பெயரில் விஷமிகள் சிலர் ‘ஃபேஸ் புக்’ கணக்கு ஆரம்பித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது தெரிய வந்தது. டுவிட்டர், ஃபேஸ் புக்கை பயன்படுத்தும் அளவுக்கு நான் படித்தவன் இல்லை. ஆனால் எனது பெயரில் 3 ஃபேஸ்புக் கணக்குகள் தொடங்கி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே, எனது பெயரிலான கணக்குகளை முடக்கி வைக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று சூரி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;