பிரசாந்தின் அதிரடி ரீ-என்ட்ரி!

பிரசாந்தின் அதிரடி ரீ-என்ட்ரி!

செய்திகள் 4-Jan-2014 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர் போன்ற பல பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் பல படங்களில் நடித்தவர் பிரசாந்த். சமீபத்தில் கலைஞர் கதை வசனத்தில் இவர் நடித்த ‘பொன்னர் சங்கர்’ படத்தில் இரட்டை வேடங்களில் தோன்றி நடிப்பில் அசத்தியிருந்த பிரசாந்துக்கு இப்படம் எதிர்பார்த்த வகையில் கை கொடுக்கவில்லை என்பதோடு அடுத்து வந்த ‘மம்பட்டியான்’ படமும் சொல்லும்படியான வெற்றியை தரவில்லை.

அதற்குப் பிறகு ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்ட பிரசாந்த் அடுத்து ’சாகசம்’ என்ற படத்தில் புது கெட்-அப்போடு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, யார் இயக்கப் போகிறார், யார் கதாநாயகி என்ற விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்திற்காக தன் உடம்பை ’டிரிம்’ ஆக வைத்துக்கொண்டு இப்போது புது ஸ்டைலில் வலம் வருகிறார் பிரசாந்த்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;