ஹேப்பி பர்த்டே!

ஹேப்பி பர்த்டே!

செய்திகள் 4-Jan-2014 10:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய இளம் முன்னணி நடிகர்களில் ஜீவாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! கமர்ஷியல் சினிமாக்களில் மட்டுமல்லாமல், ‘ராம்’, ‘கற்றது தமிழ்’ போன்ற மாறுபட்ட கதைக் களங்களை கொண்ட படங்களிலும் நடித்து, தன்னை சிறந்த ஒரு நடிகராக அடையாளம் காட்டியவர் ஜீவா! சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ’என்றென்றும் புன்னகை’ இவருக்கு மற்றுமொரு வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் ஜீவா இன்று தனது பிறந்த நாளை ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி ‘டபுள்’ மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்.

இந்த இனிய நாளில் ஏராளமான மலையாள படங்களிலும், ‘அரவான்’, ‘ஞானக்கிறுக்கன்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்த நடிகை அர்ச்சனா கவிக்கும் இன்று இனிய பிறந்த நாள்! இவர்கள் இருவருக்கும் ‘ஹேப்பி பர்த்டே’ சொல்வதில் ’டாப் 10 சினிமா’ பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;