கேன்சரை தோற்கடித்த மம்தா!

கேன்சரை தோற்கடித்த மம்தா!

செய்திகள் 3-Jan-2014 2:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’சிவப்பதிகாரம்’, ‘குரு என் ஆளு’ போன்ற பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். ‘டாடி மம்மி வீட்டில் இல்லை…’ என்ற ஒரு பாடல் போதும் இவர் சிறந்த பின்னணிப் பாடகியும் கூட என்று சொல்வதற்கு! சிறந்த நடிப்பாற்றலும், பாடும் திறனும் கொண்ட மம்தா மோகன்தாஸ், ‘அன்வர்’ என்ற மலையாள படத்தில் நடிக்கும்போது தான் தன்னை புற்றுநோய் தாக்கியிருப்பதை உணர்ந்து அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்! அதன் பிறகு தொடர்ந்து மலையாளா படங்களில் நடித்து வந்த மம்தாவை மீண்டும் ‘புற்றுநோய்’ என்ற கொடூர அரக்கன் தாக்கிவிட, எந்தவித பதற்றமும் அடையாமல் தான் நடித்துக் கொண்டிருந்த படங்களை முடித்து கொடுத்துவிட்டு மீண்டும் சிகிச்சை பெற சென்றிருந்தார். அந்த சிகிச்சைக்குப் பிறகு இப்போது பூரண குணமடைந்த மம்தா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

ஒரு இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்துள்ள மம்தா, ‘டு நோரா வித் லவ்’ என்ற படத்தில் கிருஷ் சத்தாருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அனில - பாபு என்ற இரட்டை இயக்குனர்களில் ஒருவரான பாபு தனியாக இயக்கும் படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கவிருக்கிறது. மம்தா மோகன்தாஸ் தோன்றும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

துணிச்சலோடும், தைரியத்தோடும் புற்றுநோயை தோற்கடித்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் மம்தா தான் மோலிவுட்டின் தற்போதைய டாபிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;