’13’ல் மனோஜ் பாரதி!

’13’ல் மனோஜ் பாரதி!

செய்திகள் 3-Jan-2014 12:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் உதவியாளர் டி.சுரேஷ் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் ‘13’. இந்தப் படம் அப்பா – மகன் பாசப் போராட்டத்தை சித்தரிக்கும் கதையாம். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக மனோஜ் பாரதி நடிக்கிறார். ‘அன்னக்கொடி’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாரதி இந்தப் படத்தில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் சங்கீதா நடிக்க, இவர்களின் மகள்களாக இரண்டு சிறுமிகள் நடிக்கிறார்கள்!

‘ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’, ‘ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ்’ ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் செந்தில், யோகேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கி இப்போது தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;