லண்டனில் ‘ஜெய்ஹிந்த் -2’

லண்டனில் ‘ஜெய்ஹிந்த் -2’

செய்திகள் 3-Jan-2014 11:18 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் -2’. இந்தப் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத் திவாரி, பேபி யுனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘ஜெய்ஹிந்த் 2’ படம் பற்றி அர்ஜுன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

‘‘தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இதை உருவாக்குகிறேன். படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்தது விட்டது. சமீபத்தில் பாங்காங்கில் ஒரு சண்டை காட்சியை படமாக்கினோம். இராணுவம் சம்மந்தப்பட்ட இடம் அது. சுமார் பத்து ஏக்கர் இடம். அங்கு உபயோகம் இல்லாத பிளைட்கள், படகுகள், கார்கள், என குவிந்து கிடந்தது. அங்கே அமெரிக்க ஸ்டன்ட் கலைஞர்களுடன் மோதும் காட்சிகள் பத்து நாட்கள் படமானது.

இது என் இயக்கத்தில் ஒரு லட்சியப் படம் என்றே சொல்லலாம். ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வியை பொறுத்தே அமைகிறது என்கிற கருத்தை வலியுறுத்தும் படமாக ‘ஜெய்ஹிந்த் -2’ இருக்கும். அடுத்து மும்பையில் 20 நாட்களும், லண்டனில் 20 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. சென்னையில் 20 நாட்கள் படப்பிடிப்புடன் படம் முடிந்து விடும்’’ என்கிறார் அர்ஜுன். இந்தப் படத்திற்கு எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை கவியரசு வைரமுத்து எழுத, அர்ஜுன் ஜெனா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதலின் பொன் வீதியில் - மோஷன் போஸ்டர்


;