நந்தா, அனன்யாவை துரத்திய மர்ம கும்பல்!

நந்தா, அனன்யாவை துரத்திய மர்ம கும்பல்!

செய்திகள் 3-Jan-2014 11:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்பெல் பௌன்ட் ஃபிலிம்ஸ் I N C’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அதிதி’. இந்தப் படத்தில் நந்தா கதாநாயகனாக நடிக்க, இனொரு ஹீரோவாக நிகேஷ்ராம் நடிக்கிறார். அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக பாடகர் பிரசன்னா முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் திரைக்கதை , வசனம் எழுதி இயக்கும் பரதன் படம் குறித்து கூறும்போது, ‘‘விஜயை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய நான் அடுத்து இயக்கும் படம் இது. மலையாளத்தில் ‘காக்டெயில்’ என்ற பெயரில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன கதையே ‘அதிதி’யாகி இருக்கு.

சமீபத்தில் நந்தா, அனன்யா இருவரும் ஒரு கோயிலில் சாமி கும்பிட வருகிறார்கள். அவர்களை பார்த்த மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள்களுடன் துரத்துவது மாதிரியான பரபரப்பான காட்சி ஒன்று சென்னையில் படமானது. காதல், ஃபேமிலி, கிரைம் கலந்த த்ரில்லர் கதையாக ‘அதிதி’ உருவாகிறது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றார் பரதன். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ஜெய் கவனிக்க, பரத்வாஜ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பள்ளிப் பருவத்திலே - டிரைலர்


;