ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸிடம் இங்க என்ன சொல்லுது!

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸிடம் இங்க என்ன சொல்லுது!

செய்திகள் 3-Jan-2014 10:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விடிவி’ புரொடக்ஷன்ஸ் சார்பில் ’விடிவி’ கணேஷ் தயாரித்து வரும் படம், ‘இங்க என்ன சொல்லுது’. இந்தப் படத்தில் ’விடிவி’ கணேஷ், சந்தானம் மீரா ஜாஸ்மின் முதலானோருடன் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை வின்செண்ட் செலவா இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இப்படத்திற்கு தரண் இசை அமைக்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தை வருகிற 30-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, இறுதிகட்ட வேலைகளை விறுவிறுப்பாக முடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை தமிழக மெங்கும் இராம நாராயணனின் ’ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. சிம்பு நடித்த படம் ரிலீசாகி நீண்ட நாட்கள் ஆகியுள்ள நிலையில் ’விடிவி’ கணேஷ் – சிம்பு – சந்தானம் இணைந்துள்ள இப்படம் மீது பரவலான ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;