மணிரத்னத்தின் புதிய ஹீரோ!

மணிரத்னத்தின் புதிய ஹீரோ!

செய்திகள் 2-Jan-2014 3:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மணிரத்னத்தின் ஒவ்வொரு படமும் ரிலீசான பிறகு, அவர் அடுத்து இயக்கப் போகும் படம் என்ன? அதில் யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழும்! இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ’கடல்’. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை அவ்வளவாக திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து ஒரு ஹிந்திப் படத்தை இயக்கப் போகிறார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் அது இல்லையாம்! அடுத்து தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் மலையாளத்தின் தற்போதைய முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த ஒரு சில படங்களை பார்த்த மணிரத்னத்துக்கு அவரோட பெர்ஃபார்மென்ஸ் ரொம்பவும் பிடித்துபோனதாம்! ஏற்கெனவே மலையாளத்தில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கியிருக்கும் மணிரத்னம் மோகன்லால், மம்முட்டி, பிருத்திவிராஜ் என பல ஹீரோக்களை இயக்கியுள்ளார். இந்த வரிசையில் அடுத்து தன்னை கவர்ந்த ஃபஹத் ஃபாசிலை வைத்து இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். இது குறித்து ஃபஹத்திடம் பேசியிருக்கிற மணிரத்னத்துக்கு, ‘டபுள் ஓகே’ சொல்லியிருக்கிறார் ஃபஹத் ஃபாசில்! இந்த தகவலை சமீபத்தில் ஃபஹத்ஃபாசிலே தெரிவித்திருக்கிறார்.

சென்ற ஆண்டில் 12 மலையாள படங்களில் நடித்த ஃபஹத் ஃபாசிலுக்கு, இதில் பெரும்பாலான படங்களுக்ம் வெற்றிப் படங்களாக அமைய, இப்போது தமிழ் தவிர பாலிவுட்டிலிருந்தும் நடிக்க நிறைய அழைப்புகள் வருகிறதாம்! தமிழில் ‘பூவே பூச்சுடவா’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஃபாசிலின் மகன்தான் ஃபஹத் ஃபாசில்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடலை - டிரைலர்


;