‘ஜில்லா – வீரம்’ எதற்கு முதல் இடம்?

 ‘ஜில்லா – வீரம்’ எதற்கு முதல் இடம்?

செய்திகள் 2-Jan-2014 1:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10- ஆம் தேதி ரிலீசாகவிருக்கும், ‘ஜில்லா, ’வீரம்’ படங்கள் தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்! இந்த இரண்டு படங்களும் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்தப் படங்களின் டிரைலர் மற்றும் டீஸர்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, அதில் அதிக ரசிகர்கள் ‘கிளிக்’ பண்ணிப் பார்த்திருப்பது, ’ஜில்லா’வை தான்! ‘ஜில்லா’ படத்திற்கு இந்த கௌரவம் கிடைக்க காரணம் இந்தப் படத்தில் விஜய்யுடன் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்திருப்பது தான்! டீஸர் - டிரைலர் விஷயத்தில் ‘ஜில்லா’ முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்த இரண்டு படங்களுள் எந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்பதை அறிய நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;