மீண்டும் சரண் - பரத்வாஜ் கூட்டணி!

மீண்டும் சரண் - பரத்வாஜ் கூட்டணி!

செய்திகள் 2-Jan-2014 12:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ என பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சரண். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் அஜித் நடித்த, ‘அசல்’. இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடகால இடைவெளிக்குப் பிறகு சரண் தனது, ‘சரண் மூவி ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் வினய் கதாநாயகனாக நடிக்க, சமுத்திரிகா, சுவாசிகா, கேஷா என மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாக இருக்கிறார்கள். நடிகைகள் மானு, ரிச்சா, பூஜா, அமோகா, அதிசயா, காம்னா முதலானோரை கதாநாயகிகளாக அறிமுகப்படுத்தியவர் சரண் தான்! சரண் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை (3-1-14) ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கிருஷண ரமணன் கவனிக்க, கலையை பிரபாகரும். படத்தொகுப்பை கெவினும் கவனிக்கிறார்கள். சரணுடன் பல படங்களில் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பரத்வாஜ் இப்படத்தில் மீண்டும் சரணுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;