2013ன் இசை இளவரசர்?

2013ன் இசை இளவரசர்?

செய்திகள் 31-Dec-2013 5:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், சி.சத்யா, ஜிப்ரான் உட்பட பல இசையமைப்பாளர்களின் ஆல்பங்கள் கடந்த வருடம் முழுவதும் நம் மனதைக் கொள்ளையடித்தன. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘தலைமுறைகள்’ படத்தின் பின்னணியில் ராஜா எப்போதும் ராஜாதான் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் என்றால், ‘மரியான்’, ‘கடல்’ படங்களில் ரஹ்மானின் பாடல்கள் மனதெங்கும் ரீங்காரமிட்டது. கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் இமான் ஹிட் பாடல்களைக் கொடுத்தார். ஒவ்வொரு வருடமும் ப்ளாக் பஸ்டர் ஆல்பங்களைத் தரும் யுவனும், ஹாரிஸும் இந்த வருடம் ரசிர்களை ஏமாற்றினார்கள், ‘என்றென்றும் புன்னகை’ மூலம் ஹாரிஸும், ‘பிரியாணி’ மூலம் யுவனும் வருடக் கடைசியில் தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.

ஒரே பாடல் மூலம் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, கடந்த 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இசையமைப்பாளர் அனிருத் 2013ஆம் ஆண்டு இரண்டு சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ ஆல்பங்களில் தன் மயக்கும் இசையால் ரசிகர்களை படம் பார்க்க தியேட்டர்களுக்கு இழுத்து வந்தார் அனிருத். இந்த ஆல்பங்களில் ஒன்று, இரண்டல்ல மொத்த பாடல்களுமே ‘ஹிட்’ என்பதுதான் அனிருத்தின் சாதனை. இவைதவிர, ‘டேவிட்’, ‘இரண்டாம் உலகம்’ படத்திலும் தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பைக் கூட அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டார். ராஜா, ரஹ்மான், யுவன், ஹாரிஸ் வரிசையில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் அனிருத். கடந்த வருடத்தின் ‘இசை இளவரசரா’க ஜொலித்தது இந்த ‘ஒல்லிக்குச்சி’ உடம்புக்காரர்தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;