2013ல் பயமுறுத்திய வில்லன்?

2013ல் பயமுறுத்திய வில்லன்?

செய்திகள் 31-Dec-2013 5:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் பஞ்சம் இந்த வருடம் கொஞ்சம் குறைய, தற்போது வில்லன்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பது, ‘இந்த வருடத்தில் நம்மைக் கவர்ந்த வில்லன்கள் யார்’ என யோசிக்கத் தொடங்கும்போதே புரிய வரும். வில்லன் என்றாலே நமக்கு சட்டென இப்போதும் நினைவுக்கு வருவது பிரகாஷ் ராஜும், மறைந்த நடிகர் ரகுவரனும்தான். அவர்களின் இடத்தை நிரப்புவது என்பது கடினமான காரியம் என்பதை மறுப்பதற்கில்லை.

‘உன் சமையலறையில்’ படத்தின் இயக்கத்தில் கவனம் செலுத்தியது, ஹிந்தி, தெலுங்கில் அதிக படங்கள் நடித்தது என இந்த வருடம் பிரகாஷ் ராஜ் தமிழில் நடித்தது ‘சென்னையில் ஒரு நாள்’, ‘கௌரவம்’, ‘துள்ளி விளையாடு’, ‘தில்லு முல்லு’ என மொத்தமே 4 படங்கள்தான். அதிலும் ‘துள்ளி விளையாடு’ படத்தில் மட்டுமே பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருந்தார். ஆனாலும் அவரின் நடிப்பிற்கு தீனி போடும் வகையில் இப்படம் அமையவில்லை.

அவரைத் தவிர்த்துவிட்டு இந்த வருடப் படங்களின் பட்டியலைப் பார்த்தால் அனைவரையும் பயமுறுத்திய வில்லனாக முதலில் நம் கண்களுக்குத் தட்டுப்படுவது ‘விஸ்வரூபம்’ படத்தின் ராகுல் போஸ்தான். பஞ்ச் டயலாக் பேசாமல், ஹீரோவுடன் நேருக்கு நேர் மோதாமல் தன் வித்தியாசமான உடல் மொழி, டயலாக் டெலிவரி மூலம் அனைவரையும் மிரளச் செய்தார் தீவிரவாதி ஒமர். அந்த கோலிக் குண்டு கண்ணை கழுவி சுத்தம் செய்து பொருத்திக் கொள்ளும் காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தில் உயிரோடு தப்பிக்கும் ஒமருக்காகவே ஒரு கூட்டம் 2014ல் வெளிவரவிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ராகுல் போஸ்தான் இந்த வருடத்தின் ‘பெஸ்ட் வில்லன்’ பட்டத்திற்கு மிகப் பொருத்தமானவர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கமலின் அடுத்த படம் குறித்த வீடியோ அறிவிப்பு


;