2013ன் பெஸ்ட் டைரக்டர்?

2013ன் பெஸ்ட் டைரக்டர்?

செய்திகள் 31-Dec-2013 3:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தன் கற்பனைக்கு வேறொருவரால் திரைவடிவம் கொடுக்க இயலாது என்ற நிலை வரும்போது மட்டுமே கமல்ஹாசன் இயக்கத்தில் இறங்குவார். அப்படி அவர் ஏற்கெனவே களமிறங்கிய ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’ படங்களைத் தொடர்ந்து இந்த வருடத்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்த ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்ததோடு இயக்கத்தையும் கவனித்தார். தமிழில் அதிகம் தொடாத கதைக்களம், ஹாலிவுட் படங்களைப் போன்ற பிரம்மாண்டமான செட், சண்டைக் காட்சிகள், தீவிரவாதிகளின் முகத்தைத் தோலுரித்துக் காட்டிய வித்தியாசமான காட்சி அமைப்புகள் என இப்படம் தமிழ் சினிமா ரசிகனுக்கு புதிய அனுபவமாகவே இருந்தது.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, இப்படத்தைப் பார்ப்பதற்காக ரசிகர்களை ஆந்திராவரை செல்ல வைத்தது தனிக்கதை. நடிகராக தமிழ்சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கமல், இப்படத்தின் இயக்குனராகவும் தான் ஒரு ‘உலக நாயகன்’ என்பதை நிரூபித்தார். இப்படத்தின் ‘உனைக் காணாது....’ பாடலில் கமலின் நடனமும், அதைப் படமாக்கியவிதமும் காலம் கடந்து நிற்கும். அதேபோல், தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் கமல், தொழுது முடித்தபின்பு வெகுண்டெழுந்து எதிரிகளைப் பந்தாடும் காட்சி ‘மரண மாஸ்’ என ரசிகர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தைக்கு அர்த்தமாக விளங்கியது. டெக்னிக்கலாகவும், கதையம்சத்திலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்ற ‘விஸ்வரூபம்’ படத்தை இயக்கிய கமலே இந்த வருடத்தின் பெஸ்ட் ‘கேப்டன் ஆஃப் த ஷிப்’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;