2013ன் சிறந்த படம்?

2013ன் சிறந்த படம்?

செய்திகள் 31-Dec-2013 3:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வியாபார ரீதியிலான வெற்றி மட்டுமே ஒரு படத்தை ‘சிறந்த படம்’ என்று சொல்வதற்கான போதுமான தகுதியாக அமைந்துவிடாது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டுக்கள், மற்ற படங்களிலிருந்து ஏதாவது ஒரு வகையில் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டிய விதம், தமிழ்சினிமாவிலும், ரசிகர்களிடமும் அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், குவித்த விருதுகள் என பலவகையான தகுதிகளையும் அந்தப் படம் பெற்றிருந்தால் மட்டுமே ‘சிறந்த படம்’ என்ற கௌரவத்தைப் பெறும். இவ்வளவு விஷயங்களையும் தன் வசம் கொண்டிருந்த படம் என்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி ‘சூது கவ்வும்’ மட்டுமே.

நம் ‘டாப் 10’ பட்டியலில் ‘ஹிட்’ வரிசையிலும், ‘கவனம் ஈர்த்த’ படங்கள் வரிசையிலும், அதிகம் ஒலித்த பாடல்கள் வரிசையிலும் இடம் பிடித்த ஒரே படமும் ‘சூது கவ்வும்’ மட்டுமே!. குறுந்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து ஜெயித்தவர்களின் பட்டியலில் இப்படம் மூலம் இடம்பிடித்தார் இயக்குனர் நலன் குமாரசாமி. ‘அட்டகத்தி’, ‘பீட்சா’ படங்களைத் தயாரித்த திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சி.வி.குமார் தயாரித்த இப்படமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

அதோடு தமிழ் சினிமாவிற்கு ‘ப்ளாக் ஹியூமர்’ ட்ரெண்ட்டையும் இப்படம் உருவாக்கியது. கடத்தல் கான்செப்ட்டை காமெடியாகச் சொன்ன இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம், விஜய்சேதுபதியின் அபாரமான நடிப்பு, பாடல்கள், பின்னணி இசை, வசனங்கள் என எல்லாமே தமிழ் சினிமா ரசிகனை அதிகம் கவர்ந்தது. இப்படத்தின் ‘5 ரூல்ஸ்’ கான்செப்ட்டின் தாக்கம் ஃபேஸ்புக்கில் அதிகம் இடம்பிடித்தது. அதோடு பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல்போன தாத்தாக்கள் வரை அதிகம் முணுமுணுத்தது இப்படத்தின் ‘காசு... பணம்... துட்டு... மணி மணி...’ பாடலைத்தான். ‘சூது கவ்வும்’ படத்தின் தீம் மியூசிக் கடந்த வருட காலர் ட்யூன், ரிங் டோனில் ரசிகர்களின் ஏகோபித்த தேர்வாக இருந்தது.

கேரளா, மும்பையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டது ‘சூது கவ்வும்’. அதோடு, பிரபல இணையதளம் ஒன்றின் ‘2013ன் சிறந்த இந்தியப் படங்கள்’ பட்டியலில் இடம்பிடித்த ஒரே தமிழ்ப்படமும் ‘சூது கவ்வும்’தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;