சத்திஷ்கர் வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யா ராய்!

சத்திஷ்கர் வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யா ராய்!

செய்திகள் 31-Dec-2013 12:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கர்நாடக மாநிலம், மங்களூரில் பிறந்தவர் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்! அபிஷேக் பச்சனை திருமணம் புரிந்துகொண்ட பிறகு மும்பையில் செட்டில் ஆன இத்தம்பதியருக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. மங்களூரில் பிறந்து மும்பையில் வசித்துவரும் ஐஸ்வர்யா ராயின் பெயரும், ஃபோட்டோவும் எப்படி சத்திஷ்கர் உள்ள குக்ரி கிராம வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது என்பது தான் தற்போதைய பாலிவுட்டின் லேட்டஸ்ட் டாப்பிக்! ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது வயது 40! ஆனால் ஃபோட்டோவுடன் வெளியாகியிருக்கும் குக்ரி கிராம வாக்காளர் பட்டியலில் ஐஸின் வயது எவ்வளவு தெரியுமா? 23 வயது! அவரது தந்தையின் பெயர் தினேஷ் ராய்! குக்ரி கிராமத்தில் ஐஸ்வர்யா ராய் வசித்து வரும் வீட்டு எண் 376.

இந்தச் செய்தி வெளியானதும் இதை கேள்விப்பட்ட பச்சன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு, ‘இந்த வருடத்தின் மிகப் பெரிய காமெடி இது’ என்றும் கூறி மகிழ்ந்திருக்கிறார்கள்!

ஆனால் உலக அளவில் பிரபலமான ஒரு ‘விஜபி’ இப்படி ஒரு தவறான செய்தியில் இடம் பிடித்தது வெட்கக் கேடான விஷய்ம! இது எப்படி நடந்தது என்பதை விசாரிக்கும்படி சத்திஷ்கர் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;