வீரம் - ஜில்லா கனெக்ஷன்!

வீரம் - ஜில்லா கனெக்ஷன்!

செய்திகள் 31-Dec-2013 12:33 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித்தின் ‘வீரம்’ படமும், விஜய்யின் ‘ஜில்லா’ படமும் ஜனவரி 10ஆம் தேதியன்று ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில், ‘ஜில்லா’ படத்தின் இயக்குனர் நேசன் இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, ‘‘சிவாவும் நானும் ஒண்ணா ஒரே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்லதான் படிச்சோம். என்னைவிட அவர் ரெண்டு வருஷம் ஜூனியர்.

தெலுங்குல எனக்கு ஒரு பட வாய்ப்பு வந்தப்போ, அவர்கிட்டதான் என்னைப் பத்தி கேட்டிருக்காங்க. ‘என்னைவிட நேசன் ரொம்ப நல்லா இயக்குவாரு’ன்னு அவர் எனக்காக அவங்ககிட்ட பேசியிருக்கார். கிட்டத்தட்ட பல வருடங்களாக ஃப்ரண்ட்ஸா இருக்கிற எங்க ரெண்டு பேரு படமும் ஒரே நேரத்துல வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு படமும் ஜெயிக்கணும். இதையேதான் அஜித் சாரை நான் சந்திச்சப்போ அவரும் என்கிட்ட சொன்னாரு.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ


;