அமலா பாலின் அடுத்த நாயகன்?

அமலா பாலின் அடுத்த நாயகன்?

செய்திகள் 31-Dec-2013 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது ‘நிமிர்ந்து நில்’ படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் அமலா பால் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கவிருக்கிறார். ‘எதிர்நீச்சல்’ துரை செந்தில் குமார் இயக்கவிருக்கும் புதிய படத்திற்குதான் இந்த ஜோடி ஒப்பந்தமாகி இருக்கிறது.

‘எதிர்நீச்சல்’ படத்தைத் தயாரித்த தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்காக முதன்முறையாக ஆக்ஷன் களத்தில் குதிக்கிறாராம் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கும் இசை அனிருத் தான். தற்போது சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’வின் வேலைகள் முடிந்ததும், இப்படம் தொடங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;