அப்பாவான ஃபஹத் ஃபாசில்!

அப்பாவான ஃபஹத் ஃபாசில்!

செய்திகள் 31-Dec-2013 11:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த (2013) வருடத்தில் அதிக மலையாள படங்களில், அதாவது 12 படங்களில் நடித்த ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றிருப்பவர் ஃபஹத் ஃபாசில்! இந்தப் படங்களில் பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃபஹத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’ஒரு இந்தியன் பிரணய கதா’. இந்தப் படத்தில் ஃபஹத்துக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்க, சத்தியன் அந்திக்காடு இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து ஃபஹத் ஃபாசில், ‘காட்ஸ் ஓன் கன்ட்ரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நிஜத்தில் இன்னும் திருமணம் புரிந்துகொள்ளாத ஃபஹத் ஃபாசில் இந்தப் படத்தில் இரண்டரை வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறார். இதில் ஃபஹத்துக்கு ஜோடியாக மைதிலி நடிக்க, இஷா தல்வார், லெனா என இன்னும் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை வாசுதேவ் சனல் இயக்குகிறார். மாறுபட்ட கதைகளில் நடித்து வரும் ஃபஹத்துக்கு இப்படமும் வெற்றிப் படமாக அமையும் விதமாக ‘காட்ஸ் ஓன் கன்ட்ரி’ படத்தின் கதை வித்தியாசமாக அமைந்திருக்கிறது என்கிறார் இயக்குனர் சனல்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேகா - புத்தம் புது காலை வீடியோ சாங்


;