மீண்டும் ஜனநாதன் இயக்கத்தில் ஷாம்!

மீண்டும் ஜனநாதன் இயக்கத்தில் ஷாம்!

செய்திகள் 31-Dec-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘இயற்கை’ படத்தில் நடித்த ஷாம், தற்போது மீண்டும் அவருடன் கைகோர்த்திருக்கிறார். ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, கார்த்திகா நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகும் ‘புறம்போக்கு’ படத்தில் தற்போது ஷாமும் இணைந்திருக்கிறார். ஏற்கெனவே ‘தில்லாலங்கடி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த ஷாம், இப்படத்திலும் போலீஸாகவே நடிக்கிறார். வரும் ஜனவரி 14ஆம் தேதி குலுமணாலியில் ஆரம்பிக்கும் படப்பிடிப்பு, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்கிறது. இறுதியாக சென்னையில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

யுடிவி, எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஏகாம்பரம், எடிட்டிங் வி.டிவிஜயன். இசையமைப்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;