பாரதிராஜா, பாலுமகேந்திராவுக்கு விருது!

பாரதிராஜா, பாலுமகேந்திராவுக்கு விருது!

செய்திகள் 31-Dec-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவின் 101-ஆவது ஆண்டை முன்னிட்டு தமிழ் சினிமாவின் 82வது ஆண்டை கொண்டாடும் வகையில் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு 'V 4' என்ற அமைப்பினர் விழா நடத்தி கௌரவிக்க உள்ளனர். இதற்கான விழா நாளை (ஜனவரி - 1) ஆம் தேதி சென்னையிலுள்ள அக்கார்ட் மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் மாலை 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர் சத்யராஜ் தலைமையில், பிரபு, கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள்.

‘சத்யா மூவிஸ்’ இராம.வீரப்பன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், ஏ.எல். ராகவன், வி.எஸ். ராகவன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், பத்திரிகையாளர் தேவி மணி, எம்.என். ராஜம், திருமதி மனோரமா, பாலுமகேந்திரா ஆகியோருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விருதும், இயக்குனர் பாரதிராஜாவுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருதும் வழங்கபட உள்ளது. இயக்குனர் பாலாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. அத்துடன் 2013-ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக கலைஞர்களைப் பாராட்டி கேடயம் வழங்கப்படுகின்றது. இவ்விழாவில் ‘லஷ்மண் ஸ்ருதி’யின் இசை நிகழ்ச்சி, ‘ கலாஸ் கலாலயா’வின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த விழாவில் சென்ற ஆண்டின் சிறந்த சினிமா பத்திரிகையாக ‘டாப் 10 சினிமா’ விருது பெறவிருக்கிறது.

இவ்விழா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்ஸி, தயாரிப்பாளர்கள் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் ஆகியோரின் நல்லாசியுடன் இனிதே நடைபெறவிருக்கிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;