மாதவனின் புது கெட்-அப் எதற்கு?

மாதவனின் புது கெட்-அப் எதற்கு?

செய்திகள் 30-Dec-2013 12:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல குத்துச்சண்டை வீராங்கணை மேரி காம்-ன் வாழக்கை வரலாறை மையமாக வைத்து ஹிந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மேரி காம் ஆக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தப் படம் தவிர இன்னொரு ‘பெண் பாக்ஸர்’ பற்றியும் ஒரு படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நிஜ பாக்ஸர் ஒருவரையே கதையின் நாயகியாக நடிக்க வைக்க, அதற்கான தேர்வு இப்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் பாக்ஸருக்கு பயிற்சி அளிக்கும் மாஸ்டராக மாதவன் நடிக்க இருக்கிறார்.

அதற்காக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்று பாக்ஸிங்கில் பயிற்சி எடுத்து தன் உடம்பை மெருகேற்றிக் கொண்டுள்ளார் மாதவன்! விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்தப் படத்தை மணிரத்னத்திடம் அசோஸியேட் இயக்குனராக பணிபுரிந்த சுதா இயக்குகிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகிக்காக நிஜ பாக்ஸரை தேடி வரும் இயக்குனர் சுதாவுக்கு பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உதவி புரிந்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் நிஜ சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறதாம்.

ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் படமும், சுதா இயக்கும் இந்தப் படமும் கிட்டத்தட்ட ஒரே கதைப் பின்னணியில் உருவாகி வருவதால் பாலிவுட்டில் இப்போது இந்தப் படங்கள்தான் ஹாட் டாப்பிக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;