புலியை மயக்கிய ப்ரியாமணி!

புலியை மயக்கிய ப்ரியாமணி!

செய்திகள் 30-Dec-2013 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை ப்ரியாமணியும் விலங்குகள் மீது ப்ரியம் கொண்டவர்தான்! தன் வீட்டில் உயர் ரகத்தைச் சேர்ந்த நாய்களை வளர்த்து வரும் ப்ரியாமணி இந்தப் புத்தாண்டை கொண்டாட பாங்காங் சென்றிருக்கிறார். அங்கு பல இடங்களுக்கு சென்று பொழுதை கழித்து வரும் ப்ரியாமணி அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார்! அந்த உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, குரங்கு, பாம்பு, பறவைகள் என பல விலங்குகளை பராமரித்து, அங்கு வரும் பார்வையாளர்களை வியக்க வைக்கும் விதமாக பல சாகசங்களை புரிய வைத்து மகிழ்ச்சி அடைய வைக்கின்றனர்.

அங்கு இருந்த ஒரு புலி ப்ரியாமணியை ரொம்பவும் கவர்ந்துவிட்டது! அன்போடு அதன் அருகே சென்ற ப்ரியாமணியையும் அந்தப் புலிக்கு பிடித்துவிட்டது போலும்! இல்லை என்றால் அந்தப் புலி ஒரு குழந்தையை போல ப்ரியாமணி மடி மீது படுத்து இப்படி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்குமா என்ன? துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பேர் போனவர் போல ப்ரியாமணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்பு வீடியோ


;