மீரா ஜாஸ்மினுக்கு திருமணம்!

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம்!

செய்திகள் 30-Dec-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர்! தமிழில் ‘இங்க என்ன சொல்லுது’, ‘விஞ்ஞானி’ ஆகிய படங்களில் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் ஒரு சில மலையாள படங்களிலும் இப்போது நடித்து வருகிறார். மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. தற்போது துபாயில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அனில் ஜான், சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்துள்ளார். இவர்களது திருமணம் இரு வீட்டாரும் பேசி முடிவு செய்யப்பட்டதாகும். இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் இருக்கும் எல்.எம்.எஸ். சர்ச்சில் வருகிற ஃபிப்ரவரி 12ஆம் தேதி நடக்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஞ்ஞானி - டிரைலர்


;