‘ஜில்லா’வில் ஜீவா?

‘ஜில்லா’வில் ஜீவா?

செய்திகள் 30-Dec-2013 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், மோகன்லால் நடித்திருக்கும், ‘ஜில்லா’ இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ஜெட் வேகம் பிடித்திருக்கிறது. ‘சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை நேசன் இயக்கியிருக்க, டி.இமான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் டிரெய்லர் ஜனவரி 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்தப் படத்தில் ஒரு ஹைலைட் விஷயமாக விஜய்யுடன் ஜீவாவும் ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடியிருக்கிறாராம். ஜீவா, ‘ஜில்லா’ படத்தை தயாரிக்கும் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்பதும், விஜய்யுடன் ஏற்கெனவே ‘நண்பன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;