பாலசந்தர், பாரதிராஜா இடத்தைப் பிடித்த மணிரத்னம்!

பாலசந்தர், பாரதிராஜா இடத்தைப் பிடித்த மணிரத்னம்!

செய்திகள் 28-Dec-2013 3:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நான்தான் பாலா’ படத்தின் இசைவெளியீடு இன்று காலை சென்னை கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய மணிரத்னம் கலகலப்பாக சில விஷயங்களைக் குறிப்பிட்டார்.

‘‘நான் மேல உட்கார்ந்து டிரைலர் பார்த்தேன். முடிச்ச உடனே என்னை கீழே கூட்டிட்டு வந்து ஒரு சேர்ல உட்காரச் சொன்னாங்க. அந்த சேர்ல பாலசந்தர்னு போட்டிருந்தது. இதே மாதிரி ஒரு சம்பவம் கொஞ்ச நாளைக்கு முன்னாடியும் நடந்தது. அது படைப்பாளிகள் சங்கத்துக்கு நான் ஒரு விஷயமா போனப்ப, அங்கிருந்த ஒரு சேர்ல உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தேன். நான் பேசும்போது உள்ள வந்த பாரதிராஜா என்னையே பார்த்துக்கிட்டிருந்தாரு... பேசி முடிச்சதும் அவர் சொன்னாரு... ‘என் சேரு யாரும் உட்கார மாட்டாங்க. நீ உட்கார்ந்துட்டியே’ன்னு. எப்படியோ நான் இவங்க ரெண்டு பேரு இடத்தையும் ‘பிராக்கடிலா’ பிடிச்சுட்டன். தேங்ஸ்’’ என்று சொல்ல அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;