சமீராவுக்கு திருமணம்?

 சமீராவுக்கு திருமணம்?

செய்திகள் 27-Dec-2013 11:12 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'வாரணம் ஆயிரம்’ புகழ் சமீரா ரெட்டியும் திருமணத்திற்கு தயாராகி விட்டார்! அவரை மணக்கப் போகிறவர் அக்‌ஷய் வர்தே. இவர், சமீராவின் நீண்டநாள் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெஷலாக 'பைக்'குகளை வடிவமைத்துக் கொடுக்கும் கம்பெனியை வைத்திருப்பவர் அக்‌ஷய்! ‘ஓ மை காட்’ என்ற ஹிந்திப் படத்தில் அக்‌ஷய் குமார் பயன்படுத்திய ஸ்பெஷல் பைக் இவர் வடிவமைத்ததுதான்.

அதைபோல பாலகிருஷ்ணா நடிக்கும் ’லெஜெண்ட்’ என்ற தெலுங்கு படத்திற்காகவும் அக்‌ஷய் ஸ்பெஷல் பைக் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இப்படி சினிமா தொடர்புடைய அக்‌ஷய் - சமீரா ரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சமீராவின் பிறந்த நாளான சென்ற (டிசம்பர்) 14-ஆம் தேதி மும்பையில் எளிமையாக நடந்தது. இவர்களது திருமண தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;