புத்தாண்டன்று மான் கராத்தே!

புத்தாண்டன்று மான் கராத்தே!

செய்திகள் 27-Dec-2013 10:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், ஷன்சிகா ஜோடியாக நடிக்கும், ‘மான்கராத்தே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பீட்டர் எனும் கேரக்டரில் கிக் பாக்ஸராக நடிக்கிறார். ஹன்சிகா யாழினி என்ற கேரக்டரில் நடிக்கிறார். வித்யுத் ஜமால், சதீஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாசின் அசிஸ்டென்ட் திருக்குமரன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னை கிண்டியில் அமைக்கப்பட்ட பெரிய செட்டில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆடியோவை ஃபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்படம் முடிவடைவதற்குள்ளேயே படத்தின் எல்லா ஏரியாக்களும் பெரிய விலைக்கு போயிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;