‘டபுள்’ சந்தோஷத்தில் மகேந்திரன்!

‘டபுள்’ சந்தோஷத்தில் மகேந்திரன்!

செய்திகள் 26-Dec-2013 2:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, இப்போது ஹீரோவாக புரமோஷன் பெற்றவர் மகேந்திரன். இவர் கதையின் நாயகனக நடித்துள்ள படம் ‘விழா’. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்திருக்கிறார். எழவு வீட்டில் தப்பு அடிக்கிறவனுக்கும், ஒப்பாரி வைக்கிற பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை சொல்லும் இந்தப் படம் நாளை (27-12-13) ரிலீசாகிறது. இந்தப் படத்துடன் மகேந்திரன் தெலுங்கில் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ’ஃபர்ஸ்ட் லவ்’.

இந்தப் படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக அமிதா ராவ் நடித்திருக்க, அம்பதி கோபி இயக்கியிருக்கிறார். காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படமும் நாளை ரிலீசாகிறது. ஒரே நாளில் தான் நடித்த வெவ்வேறு மொழி படங்கள் ரிலீசாகவிருப்பதால் ‘டபுள்’ சந்தோஷத்தில் இருக்கிறார் மகேந்திரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;