நட்சத்திர கிரிக்கெட்டில் சஞ்சிதா ஷெட்டி!

நட்சத்திர கிரிக்கெட்டில் சஞ்சிதா ஷெட்டி!

செய்திகள் 26-Dec-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சி.சி.எல்.' எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அணிகள் பங்கேற்று ஆடி வருகிறார்கள். விரைவில் 4-ஆவது ஆண்டு சி.சி.எல்.போட்டிகள் நடக்கவிருக்கிறது. மும்பையில் துவங்கவிருக்கும் இந்தப் போட்டியை சச்சின் டெண்டுல்கர் துவக்கி வைக்கிறார். சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

ஏற்கெனவே சென்னை அணிக்கு நடிகை த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது நடிகை சஞ்சிதா ஷெட்டியும், சென்னை அணியின் துணை விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு அணிக்கும் அந்தந்த மாநிலத்து சினிமா பிரபலங்கள் விளம்பர தூதர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்! அந்த வகையில் இந்த வருடம் தமிழக அணிக்கு த்ரிஷா மற்றும் சஞ்சிதா ஷெட்டி விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;