நடிகர் குள்ள மணி காலமானார்!

நடிகர் குள்ள மணி காலமானார்!

செய்திகள் 26-Dec-2013 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கரகாட்டக்காரன்’, ‘பில்லா’, ’இணைந்த கைகள்’ போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் குள்ள மணி. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கு சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் அந்த சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (25-12-13) இரவு 9 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 65.

மறைந்த குள்ள மணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மரமடக்கி கிராமத்தைச் சேர்ந்த குள்ள மணியின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திரையுலகில் இருந்து வானுலகிற்கு சென்ற அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'டிமான்டி காலனி' டீசர்


;