பாட்டு பாடிய ஜாக்கி சான்!

பாட்டு பாடிய ஜாக்கி சான்!

செய்திகள் 24-Dec-2013 1:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலக பிரபல நாயகர்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளையும் கவர்ந்த நாயகனாக இருப்பவர் ஜாக்கி சான். இவரது ‘போலீஸ் ஸ்டோரி’ படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது ‘போலீஸ் ஸ்டோரி 2013’ என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாத இறுதியில் வெளியாகிறது. ’3டி’ தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக ரிலீசாகவிருக்கிறது.

மேலும் இப்படத்தின் சிறப்பு அம்சமாக ஜாக்கிசான் முதல் முறையாக ஒரு பாடலை பாடியுள்ளார். யு– டியூபில் பாப்புலராக இருக்கும் இப்பாடல் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இப்படத்தை தமிழ் நாட்டில் ’சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் வெளியிடுகிறார். ‘தளபதி’, ‘முத்து’, ‘வில்லு’, ‘குருவி’, ‘ ராம்போ-3’ போன்ற 250-க்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களை என்.எஸ்.சி ஏரியாவில் விநியோகம் செய்தவர் இவர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'ஐ' மோஷன் போஸ்டர்


;