இந்த வருடத்தின் கடைசி படங்கள்!

இந்த வருடத்தின் கடைசி படங்கள்!

செய்திகள் 24-Dec-2013 4:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிற 27-ஆம் தேதி வருகிறது! வழக்கமாக பெரும்பாலான திரைப்படங்கள் வெள்ளிக்கிழமையன்று தான் ரிலீசாகும். அந்த வரிசையில் இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையன்று 4 தமிழ்ப் படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அதில் முதலாவது படம் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ’நான்தான்டா’. இரண்டாவது படம், ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ வெளியிடும் ‘விழா’. மூன்றாவது படம், விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ள ’புவனக்காடு’. நன்காவது படம் ‘என் காதல் புதிது’. இந்தப் படங்கள் தவிர தெலுங்கில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள ‘சார் வந்தாரா’ என்ற படமும் ‘கும்கி வீரன்’ என்ற ஆங்கில மொழிமாற்று படமும் ரிலீசாகவிருக்கிறது. ஆக, வருகிற வெள்ளிக்கிழமையன்று ரசிகர்களுக்கு 6 படங்கள் திரை விருந்து படைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொங்கு நாட்டு கால்நடை திருவிழா 2017


;