திடீரென்று உருவான சர்ச்!

திடீரென்று உருவான சர்ச்!

செய்திகள் 24-Dec-2013 11:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’, ’விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இதன் படப்பிடிப்பு கடந்து ஒரு மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாடலை ஜீ.வி.பிரகாஷ் உருவாகியுள்ளார். வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீலம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளார்.

“ஏலேலோ மெதப்பு வந்திருச்சி...” என்று துவங்கும் இப்பாடலை ஜீ.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணீர் சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ‘சர்ச்’ செட் போடப்பட்டது. ‘பருத்திவீரன்’, ‘ஆடுகளம்’ படங்களில் பணிபுரிந்த ஜாக்கி இதை உருவாக்கியுள்ளார். திடீரென உருவான இந்த ‘சர்ச்’-ஐ பார்க்க அக்கம் பக்கத்து ஊர் மக்கள் கூடிவிட்டார்கள். எனவே இந்த பாடல் முடிந்தும் அந்த ’சர்ச்’-ஐ புத்தாண்டு வரை விட்டு விட படப்பிடிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.

இப்பாடலுக்கு ஷோபி நடனம் அமைக்க, 250 நடன கலைஞர்களுடன் விஷால், ஜெகன், சுந்தர் நடனம் ஆடினார்கள். பாடலின் மற்றொரு பகுதியை இயற்கை சூழ்ந்த இடத்தில் படமாக்குகிறார்கள்.

இந்தப் படத்தை திரு இயக்கி வருகிறார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனிக்க, விஷாலுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். NSM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;