நலமாக உள்ளார் இளையராஜா!

நலமாக உள்ளார் இளையராஜா!

செய்திகள் 24-Dec-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசைஞானி இளையராஜா தலைமையில் வருகிற 28- ஆம் தேதி மலேசியாவில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நேற்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. அதில் கலந்துகொண்டு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த இளையராஜாவுக்கு திடீரென்று விக்கல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை சென்னை கிரீம்ஸ சாலையிலுள்ளா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் எனும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சைக்குப் பிறகு இளையராஜாவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் விரைவில் இளையாராஜா வீடு திரும்ப உள்ளார் என்றும், திட்டமிட்டபடி அவர் மலேசியா இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;