சிம்பு – டிஆரிடம் 1 கோடி மோசடி!

சிம்பு – டிஆரிடம் 1 கோடி மோசடி!

செய்திகள் 24-Dec-2013 10:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சிலம்பரசன், ‘காதல் கீதம்’ (லவ் ஆந்தம்) என்ற பெயரில் சர்வதேச அளவில் அனைத்து மொழிகளிலும் இசை ஆல்பம் ஒன்றை தயாரிக்கிறார். உலக அமைதியை வலியுறுத்தி தயாரிக்கும் இந்த ஆலபத்தில் பாடுவதற்கு அமெரிக்க பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்து தருவதாகக் கூறி சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளனர். அந்த நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து தான் கொடுத்த பணத்தை அவர்களிடமிருந்து வசூலித்து தருமாறு கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் டி.ராஜேந்தர்! சமீபத்தில், தான் மோசடி பேர்வழிகளிடம் ஏமாந்ததை புரிந்துகொண்ட டி.ராஜேந்தர் வேறொரு ஏஜென்ட் மூலம் அமெரிக்க பாடகர் ஏகானை சென்னைக்கு வரவழைத்து ஆல்பத்திற்கான பாடலை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டிரைலர்


;