மலையாள சினிமாவின் சாதனை!

மலையாள சினிமாவின் சாதனை!

செய்திகள் 23-Dec-2013 2:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய சினிமாவை பொறுத்தவரையில் இந்த வருடம் (2013) எண்ணிக்கையில் அதிக படங்கள் எந்த மொழியில் ரிலீசாகியிருக்கும் என்கிறீர்கள்? இந்தியா முழுக்க விலைபோகும் தமிழ் படங்கள், அல்லது ஹிந்திப் படங்கள் என்றால் அதுதான் இல்லை! நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் தயாரான மலையாள படங்களே அந்த சாதனையை புரிந்துள்ளது! இந்த வருடம் மலையாளத்தில் 158 படங்கள் ரிலீசாகியிருக்கிறது! மற்ற மொழிகளை பொறுத்தவரையில் மலையாளத்திற்கு அடுத்தபடியாக தமிழில் 146 படங்களும், ஹிந்தியில் 123 படங்களும், கன்னடத்தில் 119 படங்களும், தெலுங்கில் 116 படங்களும் வெளியாகியிருக்கிறது.

பட எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பிடித்துள்ள மலையாளம், வணிக ரீதியாகவும் சென்ற ஆண்டை விட (2012) இந்த ஆண்டு முன்னிலை வகிக்கிறது. மலையாள சினிமாவில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் இந்த ஆண்டு வெளியான 158 படங்களில் கிட்டத்தட்ட 20 படங்கள் ஹிட் ஆகி அந்த படங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. அது மாதிரி பெரிய லாபம் இல்லை என்றாலும் போட்ட முதலீட்டுக்கு பங்கம் வராமல் சிறிய லாபத்துடன் வெற்றி பெற்ற படங்களை எடுத்துக் கொண்டால் அதன் எண்ணிக்கையும் கிட்டதட்ட 25 வருமாம்!

ஆக, கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களின் எண்ணிக்கை, வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் இந்த 2013-ஆம் ஆண்டு மலையாள சினிமாவை பொறுத்தவரையில் சிறப்பான ஆண்டாக அமைந்து, மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்திருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவர கணக்கு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டம்மி டப்பாசு ப்ரோமோ பாடல்


;