ஷாருக்கானை முந்திய ஆமீர்கான்!

ஷாருக்கானை முந்திய ஆமீர்கான்!

செய்திகள் 23-Dec-2013 11:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் படம் ‘தூம் 3’. இதற்கு முன் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் புரிந்த வசூல் சாதனையை இப்போது ’தூம் 3’ முறியடித்துள்ளது. ஷாருக்கானின், ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரிலீசான முதல் நாள் அள்ளிய வசூல் 33.10 கோடி ரூபாய்! ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ’தூம் 3’ முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா? 36.22 கோடி ரூபாய்! ஒரு புள்ளி விவர கணக்குபடி, ‘தூம் 3’ இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டுமாம்! ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் 100 கோடி ரூபாய் வசூலை தொட எடுத்துக்கொண்ட நாட்களை விட குறைவான நாட்களில் ‘தூம் 3’ நூறு கோடி ரூபாய் வசூல் செய்து அந்த சாதனையையும் முறியடிக்கும் என்கிறது அந்த புள்ளி விவர கணக்கு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;