’ரீ-மேக்’கில் களமிறங்கிய சுசி!

’ரீ-மேக்’கில் களமிறங்கிய சுசி!

செய்திகள் 23-Dec-2013 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், அபர்ணா கோபிநாத் ஜோடியாக நடித்து ஹிட் ஆன படம் மலையாள படம் ‘ஏ.பி.சி.டி.’ மார்ட்டின் ப்ரக்காட் இயக்கியிருக்கும் இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை இயக்குனர் சுசி கணேசன் வாங்கியிருக்கிறார். ஏற்கெனவே தமிழில் ஹிட் ஆன ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ஹிந்தி ரீ-மேக் ரைட்ஸை வாங்கியிருக்கும் சுசி கணேசன், ஹிந்தியில் அந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவரை வைத்து இயக்கி தயாரிக்க இருக்கிறார். அதுபோலவே ‘ஏ.பி.சி.டி’ படத்தையும் ஒரு அறிமுக இயக்குனரை வைத்து இயக்கி தயாரிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;