தாடி இல்லாத மோடியும், தாடி வைத்த ரஜினியும்!

தாடி இல்லாத மோடியும், தாடி வைத்த ரஜினியும்!

செய்திகள் 20-Dec-2013 7:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘தாடியோட இருக்கிற மோடியை விட தாடி இல்லாத மோடிதான் அழகு!’’ இப்படி ஒரு கமென்ட் அடித்தவர் யார் தெரியுமா? பாலிவுட் அழகி சித்ராங்கதா சிங்! ‘’ஆண்கள் ஷேவ் பண்ணாமல் இருப்பது குளிக்காமல் இருப்பதற்கு சமம்! க்ளீன் ஷேவ் செய்த ஆண்கள்தான் எப்போதும் அழகாக தெரிவார்கள்’’ என்றும் சொன்ன சித்ராங்கதாவுக்கு நம்ம சூப்பர் ஸ்டாரை தாடியுடன் பார்க்கதான் பிடிக்குமாம்! இதற்கு அவர் கூறும் காரணம், ‘‘ரஜினி எந்த கெட்-அப்பில் இருந்தாலும் அவர் ஒரு ஸ்டைல் மன்னன் தான்’’ என்கிறார்!

சித்ராங்கதா இப்படி சொன்னதெல்லாம் ஒரு ஷேவிங் பிளேட் கம்பெனியோட புரொமோஷன் நிகழ்ச்சியில்தான்! இவர் இப்படி நரேந்திர மோடியையும், ரஜினிகாந்தையும் ஐஸ் வைத்து பேசிய பேச்சு இப்போது அந்த பிளேட் கம்பெனிக்கு பெரும் விளம்பரத்தை தேடித் தந்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;