முதல் பரிசை தட்டிச் சென்ற தங்கமீன்கள்!

முதல் பரிசை தட்டிச் சென்ற தங்கமீன்கள்!

செய்திகள் 20-Dec-2013 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த விழாவில் 58 நாடுகளை சேர்ந்த 163 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து, ராம் இயக்கி, ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட ‘தங்கமீன்கள்’ படம் முதல் பரிசை தட்டிச் சென்றது. இந்தப் படத்தை இயக்கிய ராமுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசும், இந்தப் படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாருக்கு 1 லட்சமும் வழக்கப்பட்டது.

இரண்டாம் பரிசு டாக்டர் ராமதாஸ் தயாரித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கிய ‘ஹரிதாஸ்’ படத்திற்கு கிடைத்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் ராமதாஸ், இயக்குனர் குமரவேலன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

பாலா இயக்கிய, ‘பரதேசி’ படத்தில் சிறப்பாக நடித்த அதர்வாவுக்கு விசேஷ விருது வழங்கப்பட்டது. ‘தங்கமீன்கள்’ படத்தில் நடித்த சிறுமி சாதனா, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடித்த சிறுவன் பிருத்திவிராஜ் ஆகிய இருவருக்கும் சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இசை அமைப்பாளர் அனிருத்துக்கு ‘அமிதாப்பச்சன் விருது’ வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களின் பெயர்களை நடிகை ஸ்ரீப்ரியா அறிவித்தார். நடிகர் கார்த்தி, நடிகை அனுஹாசன் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;