பட அதிபர்களுக்கு விஜய் உதவி!

பட அதிபர்களுக்கு விஜய் உதவி!

செய்திகள் 20-Dec-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், மோகன்லால் நடிப்பில், நேசன் இயக்கத்தில், ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஜில்லா’. இப்படத்தின் பாடல்களை 21-ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் நேற்று (19-12-13) திடீரென்று ஒரு விழா நடத்தப்பட்டு அந்த விழாவில் ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்! அத்துடன் இந்த விழாவில் விஜய் தன்னை ஆரம்ப காலத்தில் வைத்து படம் தயாரித்த 5 பட அதிபர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

அந்த பட அதிபர்கள் விஜய் நடித்த, ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை தயாரித்த எஸ்.சௌந்திர பாண்டியன், ‘வசந்த வாசல்’ படத்தை தயாரித்த எம்.ராஜாராம், ‘மின்சார கண்ணா’ படத்தை தயாரித்த ஆர்.சாந்தா (மறைந்த பட அதிபர் கே.ஆர்.ஜி.யின் மனைவி), ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தயாரித்த சி.வி.ராஜேந்திரன், ‘விஷ்ணு’ படத்தை தயாரித்த பி.பாலாஜி (மறைந்த இயக்குனர்- தயாரிப்பாளர் எம்.பாஸ்கரின் மகன்) ஆகியோராவர். இவர்களுக்கு நிதி உதவி வழங்கி விஜய் பேசும்போது,

‘‘பலரது கூட்டு முயற்சியில் உருவாவதுதான் சினிமா. அதில் தயாரிப்பாளர் மட்டும்தான் உழைப்புடன் அவர்கள் சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள். படம் துவங்கியது முதல் படம் முடிந்து ரிலீஸ் ஆகிற வரை கிட்டத்தட்ட 100 பேருக்கு சம்பளம் கொடுத்து, சாப்பாடும் கொடுத்து ஒரு தாயைப்போல கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் மனசு கஷ்டப்படுகிறது. என் ஆரம்பகால தயாரிப்பாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படும்போது அவர்களுக்கு உதவுவது என் கடமை என்று தோன்றுகிறது. அது ஏன் இப்போது தோன்றுகிறது என்று கேட்கலாம். நல்ல விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அதை உடனே செயல்படுத்திட வேண்டும். நான் செய்கிற உதவிகளை போன்று மற்றவர்களும் செய்தால் நான் ரொம்பவும் சந்தோஷப்படுவேன். வெற்றி 2 மடங்கு நம்பிக்கையையும், தோல்வி 2 மடங்கு அனுபவத்தையும் கொடுக்கும். அந்த அனுபவங்களை கொண்டு தயாரிப்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை’’ என்றார் விஜய்.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌதிரி, இயக்குனர் நேசன், இசைஅமைப்பாளர் டி.இமான் முதலானோரும் பேசினார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;