‘நானி’யின் ஆஹா கல்யாணம்!

‘நானி’யின் ஆஹா கல்யாணம்!

செய்திகள் 20-Dec-2013 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் பிரபல 'யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறது. ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ' பேண்ட் பஜா பராத் ' என்ற ஹிந்தி படம்தான் தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ ஆக வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் சடங்கு, சம்பிரதாயம் ,உள்ளிட்ட ஆடம்பர திருமணங்கள் பற்றியும், அந்த திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த காதல் உணர்வோடு கலகலப்பாக சித்தரித்திருக்கிறதாம். ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி , நாயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக மும்பை அழகி வாணி குப்தா நடித்திருக்கிறார் . இந்தப் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோகுல் இயக்கியிருக்கிறார். தமிழில் வெளியாகியுள்ள ‘தூம் 3’ திரைப்படத்துடன் ' ஆஹா கல்யாணம் ' திரை படத்தின் முன்னோட்டம் திரையிடப்படுகிறது. இந்தப் படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்க, தரண் இசை அமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்'கே இளம் உள்ளங்களை கவரும் விதமாக அமைந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;