நட்சத்திர கிரிக்கெட்டில் த்ரிஷா!

நட்சத்திர கிரிக்கெட்டில் த்ரிஷா!

செய்திகள் 19-Dec-2013 5:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த மூன்று ஆண்டுகளாக சி.சி.எல்.எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அணிகள் பங்கேற்று ஆடி வருகிறார்கள். விரைவில் 4-ஆவது ஆண்டு சி.சி.எல்.போட்டிகள் நடக்கவிருக்கிறது. மும்பையில் துவங்கவிருக்கும் இந்தப் போட்டியை சச்சின் டெண்டுல்கர் துவக்கி வைக்கிறார். சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இப்போட்டிகள் நடைபெறவிருக்கிறது. இந்த முறை சென்னை அணிக்கு நடிகை த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு அணிக்கும் அந்தந்த மாநிலத்து பிரபலங்களை விளம்பர தூதர்களாக நியமிப்பது வழக்கம்! அந்த வகையில் தமிழக அணிக்கு த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒண்ணுமே ஆகல - அனிருத் ரவிச்சந்தர் காதலர் தின இசை ஆல்பம்


;