இந்த வருட கடைசிப் படம் விழா!

இந்த வருட கடைசிப் படம் விழா!

செய்திகள் 19-Dec-2013 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த வருடத்தின் இறுதியில் வெளியாக இருக்கும் படங்களில் ‘விழா ’என்ற படமும் குறிப்பிடத்தக்கது. இராம.நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமும், அஷுர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மகேந்திரன், மாளவிகா மேனன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இழவு வீட்டில் தப்பு அடிக்கிறவனுக்கும், ஒப்பாரி வைக்கிற பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், திருப்பங்கள் என செல்லும் கதையைக் கொண்ட இப்படத்தை அறிமுக இயக்குனர் பாரதி பாலகுமாரன் இயக்கியிருக்கிறார். கிராமிய பின்னனியில் படம் பிடிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை யூ.கே.செந்தில்குமார் கவனித்திருக்க, ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;