'கான்'களை ஓரம் கட்டிய சன்னி!

 'கான்'களை ஓரம் கட்டிய சன்னி!

செய்திகள் 19-Dec-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கூகிள் மற்றும் யாஹு இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்டிருக்கும் இந்தியன் செலிபிரிட்டி யார் என்று தெரியுமா? பிரபல கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்! யாஹு, கூகிள் தந்திருக்கும் தகவலின்படி சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரெல்லாம் சன்னிக்கு பின்னால் தான் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு தென்னிந்திய பிரபலம் யார் என்றால் அது நடிகை காஜல் அகர்வால் மட்டும்தான்! இவர் இந்தப் பட்டியலில் 7-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார். சென்ற ஆண்டிலும் இதே சன்னி தான் முதல் இடத்தில் இருந்தார்! ‘ஜிசம் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி கவர்ச்சி விருந்து படைத்து வரும் சன்னி நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஜாக்பாட்’. இந்தப் படத்தை தொடர்ந்து சூப்பர் ஹிட்டான ‘ராகினி எம்.எம்.எஸ்.’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார் சன்னி லியோன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஷாருக்கான் சிக்ஸ் பேக் வொர்க் அவுட் - வீடியோ


;