பின்னணிப் பாடகர் இயக்கும் படம்!

பின்னணிப் பாடகர் இயக்கும் படம்!

செய்திகள் 19-Dec-2013 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் மோகன்லால், பிருத்திவிராஜ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் படங்களில் பின்னணி பாடியுள்ளவர் ராஜேஷ் விஜய். மலையாளத்தில் 'கோல்டன் ஐலேண்ட்' என்ற படத்துக்கு இசையமைத்துள்ளதுடன் பல ஆல்பங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய நண்பரின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சியினை மைய்யமாகக் கொண்டு தற்போது ‘பறவை’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சனா நடித்திருக்கிறார். மேலும் ஷில்பா, வீரமணி, முஜீப் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படத்தை பற்றி ரஜேஷ் விஜய் கூறும்போது,

"நம் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிர் கூட ஒரு பறவை போலத்தான். என்று கூட்டைத் திறந்து விடுவார்கள், சிறகடித்து வெளியேற என்று காத்துக் கிடக்கிறது. இந்த உடல் கூட்டை விட்டு உயிர்ப்பறவை பறப்பதற்கு காரணமாகும் ஒரு நோய்தான் இப்படத்தின் மைய முடிச்சு' என்றார். பாண்டிச்சேரி, திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பகுதிகளில் 56 நாட்களில் படமாக்கப்பட்டு படத்தை முடித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

465 - டிரைலர்


;